search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார் மெஸ்சி
    X

    ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார் மெஸ்சி

    பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 68 போட்டியில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி, ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார். #Messi
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் விளையாடும் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்க ஷூ வழங்கப்படும். 2017-18 சீசனில் பார்சிலோனாவின் மெஸ்சி, லிவர்பூல் அணியின் முகமது சாலா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருக்கிடையே தங்க ஷூவை பெற கடும் போட்டி நிலவியது.

    இறுதியில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி தங்க ஷூவை தட்டிச் சென்றார். மெஸ்சி இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்கள் அடித்திருந்தார்.

    தங்க ஷூவை வென்ற மெஸ்சி இதுபற்றி கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் கால்பந்து போட்டியை தொடங்கும்போது இது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை மீண்டும் பெறுவேன் என்று நினைத்தது கிடையாது’’ என்றார்.
    Next Story
    ×