search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியின் நடத்தை மிகவும் அவமானகரமானது: மிட்செல் ஜான்சன் காட்டம்
    X

    விராட் கோலியின் நடத்தை மிகவும் அவமானகரமானது: மிட்செல் ஜான்சன் காட்டம்

    பெர்த் டெஸ்டில் விராட் கோலியின் நடத்தை மிகவும் அவமானகரமானது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் காட்டமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டின்போது இரு அணி கேப்டன்களும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். ஆட்டம் முடிந்தபின்னர் இரு அணிகளும் ஸ்லெட்ஜிங் சகஜமானது என்று கூறி அடுத்த டெஸ்டிற்கு தயாராக சென்று விட்டனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார்.

    விராட் கோலி குறித்து மிட்செல் ஜான்சன் கூறுகையில் ‘‘டிம் பெய்னுடன் கடைசியில் ஆட்டம் முடிந்தவுடன் கைகொடுக்கும்போது கண்ணுக்குக்கண் பார்த்து கைகுலுக்கி அருமையான போட்டி என்று கூற வேண்டும், கோலி கைகுலுக்கினார், ஆனால் அவர் கண்களைப் பார்க்கவில்லை, இது அவமரியாதையானது.

    இந்தியாவின் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்மொழியிலும் பந்து வீச்சிலும் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை எதிர்த்து பெரிய சவாலில் இறங்கினர், ரசிகர்கள் மகிழ்ந்தார்கள், இவற்றை நான் மகிழ்ச்சியுடன் ரசித்தேன். இவையெல்லாம் கிரிக்கெட்டிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லது.

    விராட் கோலி இதுபோன்ற நடத்தையில் கண்டுகொள்ளப்படுவதில்லை, அவரை பீடத்தில் ஏற்றி வைக்கின்றனர். ஆனால் இந்த டெஸ்ட் அவரை மிகவும் மலிவான ஒரு மனிதராகவே காட்டியது. தொடருக்கு முன்பு தான் மிகவும் மாறிய ஒரு மனிதர் என்றார். ஆனால் அவரிடம் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை என்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்தார். ஆனால் மக்கள் அவர் அவுட் ஆகிச் சென்றபோது கரகோஷம் எழுப்பி வழியனுப்பினர். ஆனால் அவர் ரசிகர்களையும் மதிக்கவில்லை. அன்று மாலை செய்தியாளர்கள் ஹேண்ட்ஸ்காம்ப் கேட்ச் பற்றி அவரிடம் கேட்கவிருந்தனர், ஆனால் பும்ராவை அனுப்பிவைத்து ஏமாற்றமளித்தார்.



    எனக்கும் அவருக்கும் 2014 மெல்போர்ன் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. நான் பந்தை பீல்ட் செய்து த்ரோ செய்தேன், நான் ஸ்டம்பைத்தான் குறிவைத்தேன், ஆனால் அது அவர் மேல் பட்டது, நான் அதற்காக மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவரோ, ‘‘உங்களை நான் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று பேசினார்.

    டிம் பெய்ன் பிரமாதமாக கோலியை எதிர்கொண்டார், அவர் ஒரு அணியின் கேப்டன், அவர் ஏன் அடிபணிய வேண்டும்? அவர் ஒரு அணியின் கேப்டனாக நடந்து கொண்டார். டிம் பெய்ன் சரியாகவே நடந்து கொண்டார்” என்றார்.
    Next Story
    ×