search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ரூ. 6.4 கோடிக்கு வாங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
    X

    தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ரூ. 6.4 கோடிக்கு வாங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் இன்கிராமிற்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 32 வயதான பேட்ஸ்மேன் கொலின் இன்கிராம் பெயர் ஏலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் எந்த அணியும் அவரை எடுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் டெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் அவரது மதிப்ப ஐந்து கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் 6.4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம் எதிர்பாராத வகையில் 6.4 கோடி ரூபாயை தட்டிச் சென்றுள்ளார்.
    Next Story
    ×