search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடித்தது ஜாக்பாட்: வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய், ஷிவம் டுபேக்கு ரூ. 5 கோடி
    X

    அடித்தது ஜாக்பாட்: வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய், ஷிவம் டுபேக்கு ரூ. 5 கோடி

    இந்திய அணியில் இதுவரை இடம்பிடிக்காத வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கும், ஷிவம் டுபே 5 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனார்கள். #IPLAuction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அவர்களது அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    ரஞ்சி டிராபியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்கர்கள் விளாசிய மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இதனால் அவருக்கான தொகை கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    மற்றொரு ஆல்ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் போட்டி போட்டு விலையை உயர்த்தினார்கள். இதனால் வருணின் தொகை ரூ. 8 கோடியை தாண்டியது.

    இதனால் உனத்கட்டின் 8.4 கோடி ரூபாயைத் தாண்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 8.40 கோடி ரூபாய்க்கே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. இந்திய அணியில் இடம்பிடிக்காத இளம் வீரர்கள் கோடிகளை அள்ளிச் சென்றனர்.
    Next Story
    ×