search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவில் பயமின்றி விளையாடுங்கள்: பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுரை
    X

    தென்ஆப்பிரிக்காவில் பயமின்றி விளையாடுங்கள்: பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுரை

    தென்ஆப்ரிக்காவில் பயமின்றி தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.. #SAvPAK
    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டில் (1998 மற்றும் 2007) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்காது என்பதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பயமின்றி விளையாட வேண்டும் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘பவுன்ஸ், சீமிங் அதிக அளவில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு வீரரும் பயனமின்றி, பெரிய இதயத்தோடு வெற்றிக்காக விளையாட வேண்டும்.



    ஷபிக் மற்றும் அசார் அலியிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை. அவர்கள் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடியவர்கள். ஆகவே, நாங்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டால், சிறந்த பந்து வீச்சை குழுவை கொண்ட நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம்.

    முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×