search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலககோப்பை ஹாக்கி போட்டி - அர்ஜெண்டினாவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து
    X

    உலககோப்பை ஹாக்கி போட்டி - அர்ஜெண்டினாவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 3- 2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து. #HockeyWorldCup2018 #England #Argentina
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    முதல் காலிறுதியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் முதல் கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் பாரி மிடில்டன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    இதையடுத்து, இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால், 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வில் கால்னன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 

    இதற்கு பதிலடியாக, இங்கிலாந்தின் மற்றொரு வீரரான ஹாரி மார்டின் 49வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவை 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவும், பிரான்சும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #England #Argentina
    Next Story
    ×