search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை ஹாக்கி- இந்தியா அரைஇறுதியில் நுழையுமா? நெதர்லாந்துடன் நாளை மோதல்
    X

    உலக கோப்பை ஹாக்கி- இந்தியா அரைஇறுதியில் நுழையுமா? நெதர்லாந்துடன் நாளை மோதல்

    உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தைப்பிடிக்கும் அணிகள் ‘கிராஸ் ஓவர்’ என அழைக்கப்படும் 2-வது சுற்றுக்கு நுழையும். கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.

    9-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிந்தது. அதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, ஆகிய 4 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    கிராஸ் ஓவர் ஆட்டம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடந்தது. இதன் முடிவில் நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், கனடா, சீனா, நியூசிலாந்து அணிகள் வெறியேற்றப்பட்டன.

    கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் மோது கின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை (13-ந்தேதி) எதிர்கொள்கிறது.

    1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், 5-1 என்ற கணக்கில் கனடாவையும் வீழ்த்தியது. 2-2 என்ற கணக்கில் பெல்ஜியத்துடன் ‘டிரா’ செய்தது.

    3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தது. 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும், 7-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது. கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும். #HockeyWorldCup2018
    Next Story
    ×