search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரி மாதம் வழக்கு தள்ளிவைப்பு: ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது- ஸ்ரீசாந்த்
    X

    ஜனவரி மாதம் வழக்கு தள்ளிவைப்பு: ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது- ஸ்ரீசாந்த்

    ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டியின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எடுத்தது.

    ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க கோரி அவர் பி.சி.சி.ஐ.யிடம் முறையிட்டார். ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீதான தடையை நீக்கி தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் மீதான ஆயுட் கால தடை நீடித்து வந்தது.

    கேரளா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், இங்கிலாந்து அணியில் தன்னை விளையாட அனுமதிக்க கோரியும் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸ்ரீசாந்தின் வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜராகி கூறியதாவது:-

    இங்கிலாந்தில் உள்ள கிளப் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்த்துக்கு அழைப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. ஆயுள் கால தடையை நீக்காவிட்டால் அவரால் விளையாட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது. சூதாட்ட வழக்கில் இருந்து அவரை டெல்லி ஐகோர்ட்டு விடுவித்து இருந்தது. இதனால் அவரை இங்கிலாந்து கிளப்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    கிரிக்கெட் வாரிய வக்கீல் கூறும் போது ஸ்ரீசாந்துக்கு எதிராக குற்றத்தை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருந்ததால் அவருக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுள்கால தடை விதித்தது. என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது. #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    Next Story
    ×