search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிம் இக்பால் 73 பந்தில் 107 ரன்கள் குவித்து உடற்தகுதியை நிரூபித்தார்
    X

    தமிம் இக்பால் 73 பந்தில் 107 ரன்கள் குவித்து உடற்தகுதியை நிரூபித்தார்

    மணிக்கட்டு காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தமிம் இக்பால் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 73 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். #BANvWI
    வங்காள தேச அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் தமிம் இக்பால். இவருக்கு ஆசிய கோப்பையின்போது மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. காயம் குணமடைந்து இன்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் களம் இறங்கினார்.

    முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 81 ரன்களும், சேஸ் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் குவித்தனர். பின்னர் 332 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச கிரிக்கெட் போர்டு லெவன் அணியின் தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இம்ருல் கெய்ஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தமிம் இக்பால் உடன் சவுமியா சர்கார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமிம் இக்பால் 73 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். சவுமியா சர்கார் 83 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 103 ரன்கள் அடித்து களம் இருந்தார். வங்காள தேச கிரிக்கெட் போர்டு லெவன் அணி 41 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.

    இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வங்காள தேச கிரிக்கெட் போர்டு லெவன் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×