search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 75/5
    X

    வங்காள தேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 75/5

    டாக்காவில் நடைபெற்று வரும் வங்காள தேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 75 ரன்களை எடுத்து திணறி வருகிறது. #BANvWI #Mahmudullah #ShakibAlHasan
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று டாக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் ஷாகில் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ஷத்மான் சிறப்பாக விளையாடி 76 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் சாகிப் அல் ஹசன் 80 ரன்களில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மெஹ்முதுல்லா நிதானமாக ஆடி சதமடித்தார். அவர் 136 ரன்களில் அவுட்டானார். கடைசியில் லிட்டன் தாஸ் சற்று அதிரடி காட்டி 54 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வங்காள தேசம் தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 508 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச், ஜோமல் வாரிகன், தேவேந்திர பிஷு மற்றும் பிராத்வைட் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை ஆடியது. வங்காள தேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் பந்து வீச்சில் சிக்கி முன்னணி வீரர்கள் அவுட்டாகினர்.



    அந்த அணியின் கேப்டன் பிராத்வை டக் அவுட்டானார். பாவெல் 4 ரன்னிலும், ஷாய் ஹோப் 10 ரன்னிலும், சுனில் அம்ப்ரிஸ் 7 ரன்னிலும், ரூஸ்டன் சேஸ் ரன் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஹெட்மையர் மற்றும் டவ்ரிச் ஜோடி நிதானமாக ஆடியது. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மையர் 32 ரன்னுடனு, டவ்ரிச் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    வங்காள தேசம் சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvWI #Mahmudullah #ShakibAlHasan
    Next Story
    ×