search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுபவ வீராங்கனை மிதாலி ராஜிற்காக வருந்துகிறேன்- கவாஸ்கர்
    X

    அனுபவ வீராங்கனை மிதாலி ராஜிற்காக வருந்துகிறேன்- கவாஸ்கர்

    பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதியின்போது நடைபெற்ற விவகாரத்தில் மிதாலி ராஜிற்காக நான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தனது கவலையை தெரிவித்துள்ளார். #MithaliRaj
    பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. லீக் சுற்றில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார்கள். இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் அரையிறுதிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    மிதாலி ராஜ் அணியில் இடம்பெறாததற்கு கேப்டன்தான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று தெரியவந்தது.

    இந்நிலையில் மிதாலி ராஜிற்காக தான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் மிதாலி ராஜிற்கான வருந்துகிறேன். அவர் சிறந்த வீராங்கனை. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அவர் ஒரு போட்டியில் காயம் அடைந்த போதிலும், அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். இதை அப்படியே ஆண்கள் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால், விராட் கோலி ஒரு போட்டியில் காயம் அடைந்து, அதன்பின் உடற்தகுதி பெற்று அடுத்த போட்டிக்கு தயாரானா், அவரை நீங்கள் நீக்கி விடுவீர்களா?.



    நாக்அவுட் போட்டியில் நீங்கள் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் ஆட்டம் அணிக்கு முக்கியமானது. ரமேஷ் பவார் உடன் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இங்கிருந்து கருத்து கூறுவது மிகக்கடினம். ஆனார், எந்தவொரு காரணமாக இருந்தாலும் அவரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    மிதாலி ராஜ் இல்லாத 11 பேர் கொண்ட அணியில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இது சரியான காரணம் என்று என்னால் நினைக்க இயலவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீக்கக்கூடாது’’  என்றார்.
    Next Story
    ×