search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் கோலிக்கு இந்த ஆண்டில் ரூ.170 கோடி வருமானம்
    X

    உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் கோலிக்கு இந்த ஆண்டில் ரூ.170 கோடி வருமானம்

    உலகின் பணக்கார கிரிக்கெட் வீரரான விராட் கோலி இந்த ஆண்டில் ரூ.170 கோடி வருமானம் ஈட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிப்பவர் விராட்கோலி.

    இந்திய அணி கேப்டனான அவர் விளையாட்டு மட்டுமின்றி விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.

    இந்த நிலையில் விராட்கோலி இந்த ஆண்டில் ரூ.170 கோடி வருமானம் ஈட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

    உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

    உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் பட்டியலில் அவர் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களில் கோலி 82-வது இடத்தில் உள்ளார். அவர் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சைவிட அதிக வருவாய் ஈட்டியுள்ளார்.

    டிஸ்காட், ‘ஆடி’கார், பூமா, உபர் உள்ளிட்ட 21 விளம்பர நிறுவனங்கள் கோலி கைவசம் உள்ளன.

    வாட்ச், கார்கள். விளையாட்டு உபகரணங்கள், மோட்டார் பைக், துணி மணிகள், சுகாதார உணவு, எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட விளம்பரங்களில் அவர் பங்கேற்று வருகிறார்.

    சமூக வலை தளங்களில் கோலியை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஸ்புக்கில் ரூ.3.7 கோடி பேரும், டுவிட்டரில் 2.71 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 2.5 கோடி பேரும் கோலியை பின் தொடர்கிறார்கள். #ViratKholi
    Next Story
    ×