search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    60 நாட்களுக்குப்பின் பந்து வீச தொடங்கியுள்ளேன்- ஹர்திக் பாண்டியா
    X

    60 நாட்களுக்குப்பின் பந்து வீச தொடங்கியுள்ளேன்- ஹர்திக் பாண்டியா

    காயத்தால் சுமார் 60 நாட்களுக்கு மேல் முடங்கிக்கிடக்கும் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலக்கு என்று தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது முதுகு வலியால் தொடரில் இருந்து விலகினார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடிக்க முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு உடற்தகுதி பெற கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். முழுமையான உடற்தகுதி பெற்றபின், மும்பையில் கடுமையான பந்து வீச்சு பயிற்சியை தொடங்குவேன்.

    60 நாட்களுக்குப் பிறகு லேசான வகையில் பந்து வீச தொடங்கியுள்ளேன். ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் சரியாக வீசிவிட்டேன் என்றால், அதன்பின் சரியான திசையில் என்னால் கண்டிப்பாக செல்ல முடியும்’’ என்றார்.

    Next Story
    ×