search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான டி20 தொடர் சிறந்த வாய்ப்பு- ஆரோன் பிஞ்ச்
    X

    இந்தியாவிற்கு எதிரான டி20 தொடர் சிறந்த வாய்ப்பு- ஆரோன் பிஞ்ச்

    வார்னர், ஸ்மித் இல்லாத நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடரை வெல்ல டி20 சிறப்பான வாய்ப்பு என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருந்த வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் அந்த அணி தவித்து வருகிறது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

    இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்களையும், ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற டி20 தொடரிலும், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில்தான் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நாளை பிரிஸ்பேனில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டியளித்தார். அப்போது முன்னணி வீரர்கள் இல்லாமல் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்த இந்திய தொடர் மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனாலும், நாங்கள் சிறந்த டி20 அணிதான். நியூசிலாந்து, இங்கிலாந்து முத்தரப்பு மற்றும் ஜிம்பாப்வே தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். டி20 போட்டியில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் நீண்ட காலமாக இந்தியா சிறந்த பார்மில் உள்ளது. ஆனால், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த தொடர எங்களுக்கு சிறப்பான வாய்ப்பு. உண்மையிலேயே இந்தியாவிற்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்’’ என்றார்.
    Next Story
    ×