search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேடார் லிசோவ்
    X
    பேடார் லிசோவ்

    நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரியா அணி பயிற்சியாளர் இடைநீக்கம்

    நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரியா அணி பயிற்சியாளர் பேடார் லிசோவை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. #WorldBoxing #Championship #PetarLesov
    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹலுக்கு எதிரான போட்டியில் பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தோல்வி கண்டதாக அறிவித்ததும் அதிருப்தி அடைந்த பல்கேரியா அணியின் பயிற்சியாளர் பேடார் லிசோவ் தண்ணீர் பாட்டிலை ரிங் (மைதானம்) பகுதியில் எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    இந்த பிரச்சினை குறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தனது பிரதிநிதி மூலம் விசாரித்தது. இதைத்தொடர்ந்து பேடார் லிசோவை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது அடையாள அட்டையும் பறிக்கப்பட்டது. அவர் எஞ்சிய போட்டிகளில் மைதானத்துக்குள் நுழைய முடியாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இடைநீக்கம் செய்யப்பட 57 வயதான பேடார் லிசோவ் (பல்கேரியா) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #WorldBoxing #Championship #PetarLesov
    Next Story
    ×