search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் டி20 உலகக்கோப்பை- இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
    X

    பெண்கள் டி20 உலகக்கோப்பை- இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

    ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா. #WomenT20 #WorldCup
    பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இத்தொடரில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காள தேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 15-ந்தேதி எதிர் கொள்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியாவும்தான் மோதிய 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

    உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்ததில் ‘ஏ’ பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னே எடுக்க முடிந்தது. மழையால் இங்கிலாந்துக்கு 16 ஓவர்களில் 64 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து 3 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா தலா 2 புள்ளியுடன் உள்ளன. இன்றைய ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான்- அயர்லாந்து, ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×