search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த முஷ்பிகுர் ரஹிம்
    X

    இரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த முஷ்பிகுர் ரஹிம்

    ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் வங்காள தேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 2--வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 நாட்அவுட்), மொமினுல் ஹக்யூ (161) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஆட்டமிழக்காமல் 219 ரன்கள் குவித்ததன் மூலம் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அந்த சாதனைகள் பின்வருமாறு:-

    1. 219 ரன்கள் அடித்ததன் மூலம் வங்காள தேச பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் அடித்ததுதான் இதற்கு முன் சாதனையாக இருந்தது.



    2. 200 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு முறை சொந்த நாட்டின் சாதனையை முறியடித்த டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லி, வினு மங்கட், பிரையர் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார்.

    3. விக்கெட் கீப்பராக இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரின் அதிபட்ச நான்காவது ஸ்கோர் இதுவாகும்.

    4. 421 பந்துகள் சந்தித்ததன் மூலம் அதிக பந்துகள் சந்தித்த வங்காள தேச பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அஷ்ரபுல் 417 பந்துகள் சந்தித்ததே சாதனையாக இருந்தது.



    5. 589 நிமிடங்கள் பேட்டிங் செய்து டெஸ்ட் இன்னிங்சில் அதிக நிமிடங்கள் பேட்டிங் செய்த வங்காள தேச பேட்டிஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமினுல் இஸ்லாம் 535 நிமிடங்கள் களத்தில் நின்று 145 ரன்கள் சேர்த்துள்ளார்.

    6. 2018-ம் ஆண்டில் அடிக்கப்பட்ட ஒரே இரட்டை சதம் இதுதான். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 192 ரன்கள் அடித்ததே 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.

    7. 160 ஓவர்கள் விளையாடியது 2-வது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன் 2013-ல் 196 ஓவர்கள் விளையாடியுள்ளனர்.
    Next Story
    ×