search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் வீரர் காயம்
    X

    பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் வீரர் காயம்

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயமடைந்தார். #PAKvNZ #NZvPAK

    அபுதாபி:

    பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல் -இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்னே எடுக்க முடிந்தது. ரோஸ் டெய்லர் அதிக பட்சமாக 86 ரன்னும், நிக்கோலஸ் 33 ரன்னும் எடுத்தனர். சகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஹர் ஜமான் 88 பந்தில் 88 ரன்னும் (11 பவுண்டரி), பாபர் ஆசம் 50 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். பெர்குசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


    இந்தப்போட்டியின் போது பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்- ஹக் காயம் அடைந்தார். 16 ரன்னில் இருந்தபோது நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பெகுசன் வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை பலமாக தாக்கியது. இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். ஆட்டத்தின் 13-வது ஓவரில் முதல் பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அவருக்கு ஆடுகளத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சக வீரர் பஹர்ஜமானும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் அருகே வந்து அவரது உடல் நலம் பற்றி கேட்டு அறிந்தனர்.

    சிறிது நேரத்தில் இமாம்- உல்-ஹக் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்க்கப்பட்டது. இதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்தது. #PAKvNZ #NZvPAK

    Next Story
    ×