search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய நியூசிலாந்து ஜோடி- ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் சாதனை
    X

    ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய நியூசிலாந்து ஜோடி- ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் சாதனை

    நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து பந்து வீச்சாளர் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். #CricketRecord
    நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான ‘ஃபோர்டு டிராபி’யில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. நார்தன் அணியின் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

    சென்டிரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார்.



    கடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூககினார். இதனால் வில்லெம் லடிக் 43 ரன்கள் வாரிக்கொடுத்து ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் வங்காள தேசத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக்கில் அலாவுதீன் பாபு 39 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜிம்பாப்வேயின் கேப்டன் எல்டர் சிகும்புரா ஏழு பந்தில் நான்கு சிக்சர்ஸ், மூன்று பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
    Next Story
    ×