search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டெஸ்ட்- வங்காள தேசம் அணிக்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே
    X

    முதல் டெஸ்ட்- வங்காள தேசம் அணிக்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே

    சியால்ஹெட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் வங்காள தேசம் அணியின் வெற்றிக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 282 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் 143 ரன்னில் சுருண்டது. இதனால் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 139 ரன்கள் ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    2-வது இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் குவித்தால் இமாலய இலக்கு நிர்ணயிக்கலாம் என்ற நினைப்போடு ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் மசகட்சா மட்டும் நிலைத்து நின்று 48 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் ஐந்து விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக ஜிம்பாப்வே 320 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வங்காள தேச அணிக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



    321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வங்காள தேசம் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.

    வங்காள தேச அணியின் வெற்றிக்கு 295 ரன்கள் தேவை. கைவசம் 10 விக்கெட்டுக்களும், இரண்டு நாட்களும் உள்ளன. நிதானமாக விக்கெட் இழக்காமல் விளையாடினால் வங்காள தேசம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×