search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயத்தால் அவதி - வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் ஆண்ட்ரு ரசல் டி20 தொடரில் இருந்து விலகல்
    X

    காயத்தால் அவதி - வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் ஆண்ட்ரு ரசல் டி20 தொடரில் இருந்து விலகல்

    இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் காயம் காரணமாக ஆண்ட்ரு ரசல் விலகியுள்ளது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. #INDvWI #AndreRussell
    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது.

    இதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. டெஸ்டில் மோசமாக விளையாடிய அந்த அணி, ஒருநாள் தொடரில் 3 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாட கூடியது.



    இந்நிலையில், இந்தியாவுடனான டி-20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரு ரசல் விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது.

    காயம் காரணமாக ஆண்ட்ரு ரசல் ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. டி-20 தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். காயம் குணமடையாததால் தற்போது டி-20 தொடரிலும் இருந்து விலகுகிறார்.

    கிறிஸ் கெயில், சுனில் நரைன் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லை. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஷ்லே நர்சும் விலகியுள்ளார். தற்போது ரசலும் விலகியிருப்பது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
    Next Story
    ×