search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் டேம்பரிங் சர்வதேச அளவிலான பிரச்சனை- ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் சொல்கிறார்
    X

    பால் டேம்பரிங் சர்வதேச அளவிலான பிரச்சனை- ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் சொல்கிறார்

    பால் டேம்பரிங் என்பது சர்வதேச அளவிலான பிரச்சனை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

    இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

    உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
    Next Story
    ×