search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7-வது முறை 150-க்கு மேல், 2013-ல் இருந்து அதிகபட்ச ஸ்கோர்- ஹிட்மேன் சாதனை
    X

    7-வது முறை 150-க்கு மேல், 2013-ல் இருந்து அதிகபட்ச ஸ்கோர்- ஹிட்மேன் சாதனை

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 162 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். #INDvWI #RohitSharma
    இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி சூப்பர்மேனாக ஜொலிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 162 ரன்களை குவித்தார். இந்த தொடரில் அவர் 2-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் அவர் 152 ரன் எடுத்து இருந்தார்.

    ஒட்டு மொத்தமாக ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 7-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தெண்டுல்கர் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தலா 5 முறையும், ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), ஜெயசூர்யா (இலங்கை), விராட் கோலி (இந்தியா) ஆகியோர் தலா 4 முறையும் 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர்.



    162 ரன் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா தொடர்ந்து 6-வது ஆண்டாக ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி கடந்த பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 160 ரன் எடுத்து இருந்ததை அவர் தற்பேது முந்தி உள்ளார்.
    Next Story
    ×