search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 பேட்ஸ்மேன் தரவரிசை- பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசம் முதலிடம்
    X

    டி20 பேட்ஸ்மேன் தரவரிசை- பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசம் முதலிடம்

    ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICC
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது. மூன்று போட்டிகளிலும் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடிய பாபர் ஆசம் இரண்டு அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    இதன் ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த வருடத்தில் 3-வது முறையாக நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 3-வது இடத்தில் உள்ளார். கொலின் முன்றோ 4-வது இடத்திலும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பகர் சமான் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    ரோகித் சர்மா 9-வது இடத்திலும், விராட் கோலி 13-வது இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவான் 21-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×