search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாட்ரிக் சதம் அடித்த முதல் இந்தியர் கோலி- மேலும் அவருடைய சாதனைத் துளிகள்
    X

    ஹாட்ரிக் சதம் அடித்த முதல் இந்தியர் கோலி- மேலும் அவருடைய சாதனைத் துளிகள்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான புனே ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். #ViratKohli
    * இந்திய கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த (ஹாட்ரிக்) முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் இலங்கையின் சங்ககரா (தொடர்ந்து 4 சதம்), பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்வர், தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், டி வில்லியர்ஸ், குயின்டான் டி காக், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், பாகிஸ்தானின் பாபர் ஆசம், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு அடுத்து ஹாட்ரிக் சதம் அடித்த சாதனையாளராக கோலி திகழ்கிறார்.

    * விராட் கோலி இந்திய மண்ணில் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார். இந்த தொடருக்கு முன்பாக இந்திய மண்ணில் கடைசியாக ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் (கான்பூர், 2017-ம் ஆண்டு அக்டோபர்) கோலி 113 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் சதம் அடித்திருந்த தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்சின் சாதனையை கோலி சமன் செய்தார்.



    * ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 12-வது இடத்தில் இருந்த இந்தியாவின் டோனியை (10,150 ரன்) விராட் கோலி நேற்று முந்தினார். 29 வயதான கோலி இதுவரை 214 ஆட்டங்களில் ஆடி 10,183 ரன்கள் குவித்துள்ளார்.

    * கோலி சதம் கண்டும் இந்திய அணி தோல்வியை தழுவுவது இது 6-வது நிகழ்வாகும்.

    * ஒரே தொடரில் 2-வது முறையாக மூன்று சதங்கள் விளாசியுள்ளார். கங்குலி 2003 உலகக்கோப்பையிலும், லஷ்மண் 2003-2004 ஆஸ்திரேலியா விபி தொடரிலும் மூன்று சதங்கள் அடித்துள்ளனர்.

    * ஒரு அணிக்கெதிராக தொடர்ந்து நான்கு சதங்கள் விளாசிய ஓரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    Next Story
    ×