search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் ரகானே 144 ரன்கள் விளாசல்
    X

    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் ரகானே 144 ரன்கள் விளாசல்

    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ரகானே ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் விளாசினார். #DeodharTrophy #Rahane
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கெதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகனே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×