search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இதுபோன்ற சூழ்நிலையில் பந்து வீசுவது மிகக்கடினம்- குல்தீப் யாதவ்
    X

    இதுபோன்ற சூழ்நிலையில் பந்து வீசுவது மிகக்கடினம்- குல்தீப் யாதவ்

    பனிப்பொழியும் போது பந்து வீசுவது கடினம் என்று விசாகப்பட்டினம் போட்டி குறித்து குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால் (157) 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

    பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப் (123 அவுட் இல்லை), ஹெட்மையர் (94) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நெருங்கியது. ஆனால் போட்டி வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிவடைந்தது.

    இந்திய பந்து வீச்சாளர்கள் ஷமி 59 ரன்னும், உமேஷ் யாதவ் 78 ரன்களும், குல்தீப் யாதவ் 67 ரன்களும், ஜடேஜா 49 ரன்களும், சாஹல் 63 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    விசாகப்பட்டினத்தில் இந்தியா 2-வது பந்து வீசும்போது கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பவுலர்கள் பந்தை இருக்கமாக பிடிக்க முடியவில்லை. இதனால் பந்தை டர்ன் செய்ய கஷ்டப்பட்டனர்.

    குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நிலவிய சூழ்நிலையில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.



    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பனிப்பொழிவின் போது பந்து வீசுவது மிகவும் கடினமானது. பனியால் பந்து ஈரப்பதமானது. பந்தை பிடிக்க கடினமாக இருந்தது. ஆனால், இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக விளையாட வேண்டுமென்றால், அதிக அளவில் பயிற்சி பெறுவது அவசியமானது.

    இந்த சூழ்நிலையில் ஜெட் வேகத்தில் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் திணறியது. இதனால் பந்து வீச்சு யுனிட்டான நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். பனிப்பொழிந்த நிலையிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்’’ என்றார்.
    Next Story
    ×