search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி மனித பிறவி அல்ல- வங்காளதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் புகழாரம்
    X

    விராட் கோலி மனித பிறவி அல்ல- வங்காளதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் புகழாரம்

    மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் அசத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மனிதரே அல்ல என்று தமிம் இக்பால் புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் வீரர் விராட் கோலி மட்டுமே.

    உலகளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விராட் கோலி, இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார். விராட் கோலி ஆட்டத்தை பார்த்து எப்படி ஷாட் அடிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு கிரிக்கெட் ஷாட்டுகள் அடித்து அசத்தி வருகிறார்.

    ரசிகர்கள் மட்டுமல்ல, சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்த்து அசந்துள்ளனர். வங்காள தேச கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன தமிம் இக்பால், விராட் கோலி மனிதரே அல்ல என்று நினைக்க தோன்றுகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘விராட் கோலி ஒரு மனித பிறவியே அல்ல என்று சில நேரம் நினைக்கத் தோன்றும். ஏனென்றால், அவரது விளையாடும் ஆட்டத்தை வைத்து எனக்கு அப்படி நினைக்க தோன்றுகிறது. அவர் பேட் எடுத்து களம் இறங்கிவிட்டால், ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பது தோன்றுகிறது.

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் எடுக்கும் கடின முயற்சி நம்ப முடியாத வகையில் இருக்கிறது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர்தான் நம்பர் ஒன் வீரர். விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதேபோல் அவரது ஆட்டத்தை மிகவும் ரசிக்கலாம்.

    கடந்த 12 ஆண்டுகளாக பல சிறந்த கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. ஆனால், கோலியைப் போன்று ஆதிக்கம் செலுத்திய ஒருவரை நான் பார்த்ததே இல்லை’’ என்றார்.
    Next Story
    ×