search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு
    X

    சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ViratKohli #SachinTendulkar #INDvWI
    இந்திய அணி கேப்டன் விராட்கோலி நாளைய ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்னை கடப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 81 ரன்களே தேவை.

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி நாளைய ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்னை கடப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 81 ரன்களே தேவை.

    212 ஒருநாள் போட்டியில் விளையாடி (204 இன்னிங்ஸ்) கோலி 9919 ரன் எடுத்துள்ளார். 35 போட்டியில் ஆட்டம் இழக்காமல் இருந்ததால் அவரது சராசரி 58.69 ஆகும். 36 சதமும், 48 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    10 ஆயிரம் ரன்னை எடுக்கும் 5-வது வீரர் என்ற பெருமையை கோலி பெறுகிறார். டெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,363), டிராவிட் (10,889), டோனி (10,123) ஆகியோர் வரிசையில் இடம் பெறுகிறார். சர்வதேச அளவில் 13-வது வீரர் என்ற சாதனை பெறுகிறார்.

    நாளைய ஆட்டத்தில் கோலி 47 ரன்களை எடுத்தால் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை பெறுவார். அவர் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.

    டெண்டுல்கர் 39 போட்டியில் 1,573 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சதமும், 11 அரை சதமும் அடங்கும். விராட்கோலி 28 ஆட்டத்தில் 1527 ரன் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறார். இதில் 5 சதமும், 9 அரை சதமும் அடங்கும். #ViratKohli #SachinTendulkar #INDvWI
    Next Story
    ×