search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா?
    X

    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா?

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி ஆகியோர் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 39 போட்டியில் 1573 ரன் எடுத்து உள்ளார். 9 ஆட்டத்தில் அவுட் இல்லை என்பதால் சராசரி 52.43 ஆகும். 4 சதமும், 11 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 141 ரன்கள் குவித்துள்ளார்.

    தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 27 ஆட்டங்களில் விளையாடி 1387 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 போட்டியில் அவுட் இல்லை என்பதால் அவரது சரராசரி 60.30 ஆகும். 4 சதமும், 9 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 127 ரன் குவித்துள்ளார்.

    தற்போது நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 187 ரன்கள் தேவை. 5 ஆட்டத்தில் கோலியால் இந்த ரன்னை எடுக்க இயலும்.

    ராகுல் டிராவிட் 1348 ரன்னும் (40 போட்டி), கங்குலி 1142 ரன்னும் (27 போட்டி) அசாருதீன் 998 ரன்னும் (43 போட்டி) எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.



    தெண்டுல்கர், கோலி, டிராவிட், கங்குலி ஆகிய 4 இந்திய வீரர்களே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.

    இவர்களது வரிசையில் டோனி இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 101 ரன் தேவை. டோனி 33 போட்டியில் விளையாடி 899 ரன் எடுத்து உள்ளார்.

    5 ஒருநாள் போட்டியில் 101 ரன்களை எடுப்பதன் மூலம் அவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1000 ரன்னை கடப்பார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.
    Next Story
    ×