search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- ஷர்துல் தாகூருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
    X

    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- ஷர்துல் தாகூருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்ப்பு

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். #INDvWI #UmeshYadav
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தேர்வாகி இருந்தார்.

    ஆனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டின்போது அறிமுக வீரராக இடம் பிடித்திருந்த ஷர்துல் தாகூர், வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வலது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வெளியேறினார். அதன் பிறகு அவர் மேற்கொண்டு பந்து வீசவில்லை.

    இந்த நிலையில் ஒரு நாள் போட்டி அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையிலும், ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட்டை கைப்பற்றியதாலும் உமேஷ் யாதவிற்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்கிடைத்துள்ளது.
    Next Story
    ×