search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உமேஷ் யாதவ் எப்போதும் 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை கொடுப்பவர் - விராட் கோலி புகழாரம்
    X

    உமேஷ் யாதவ் எப்போதும் 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை கொடுப்பவர் - விராட் கோலி புகழாரம்

    உமேஷ் யாதவ் எப்போதும் 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை கொடுப்பவர் என்று விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். #INDvWI #ViratKohli #umeshYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது.

    ஷர்துல் தாகூர் காயம் அடைந்தாலும், தனி ஒரு மனிதனாக உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதித்து காட்டினார். வெற்றிக்குப்பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

    ஐதராபாத் டெஸ்டில் வெற்றி பெற்றபின் விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த போட்டி மூன்று நாட்களில் முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளினார்கள். அதில் இருந்து நாங்கள் மீண்டு விட்டோம். 56 முன்னிலைப் பெற்றது போனஸ்.

    நாங்கள் மிகப்பெரிய முன்னிலை வகிக்க முயன்றோம். ஆனால், மீண்டும் பேட்டிங்கில் நாங்கள் தொய்வு அடைந்து விட்டோம். அதில் இருந்து நாங்கள் மீண்டு வர வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் விளையாடியதால் சூழ்நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. சொந்த மண்ணில் எதிரணிக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    அவர்கள் விளையாடிய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது இந்த போட்டி ஐந்து நாட்கள் வரை செல்லும் என்ற நினைத்தோம். இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.

    நீங்கள் மூன்று நபர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களது வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஹனுமா விஹாரி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த் மிடில் ஆர்டரில் அசத்தினார். பிரித்வி ஷா இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    ஆனால் நான் உமேஷ் யாதவை மட்டும் தனியாக வெளிப்படுத்த விரும்புகிறேன். முதல் 10 பந்திலேயே ஷர்துல் தாகூர் காயத்தில் வெளியேறிவிட்டார். இந்த போட்டியில் என்ன சாதித்தாரோ அதற்கு உமேஷ் யாதவ் முற்றிலும் தகுதியுடையவர். ஷமி மற்றும் ஷர்துல் இல்லாத இந்த போட்டியில் அவர் எப்படி முன்னின்று அணியை மேல்நோக்கி எடுத்துச் சென்றாரோ அதை பார்க்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவார். அவரது செயலால் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம். மிகவும் கடினமாக உழைத்தார். அவர் வாய்ப்பிற்காக காத்திருந்து, அதை சிறப்பாக கைப்பற்றிக் கொண்டார்.

    உமேஷ் யாதவ் இங்கு 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். நாங்கள் இங்கிலாந்தில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினோம். இதனால் தற்போது பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×