search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்
    X

    டி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்

    ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது டு பிளிசிஸ் டுமினியை டாஸ் சுண்டச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார். #SAvZIM
    தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி கடந்த 9-ந்தேதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. பொதுவாக கிரிக்கெட் போட்டியின்போது போட்டியை நடத்தும் அணியின் கேப்டன் டாஸ் சுண்ட, வெளிநாட்டு அணி கேப்டன் ஹெட் அல்லது டெய்ல் என டாஸ் கேட்பார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருக்கும் டு பிளிசிஸ் கடந்த ஆறு போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், மாறுதலுக்காக ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத டுமினியை டாஸ் சுண்ட அழைத்தார். டுமினி டாஸ் சுண்ட ஜிம்பாப்வே அணி கேப்டன் என்ன விழ வேண்டும் என்ற விருப்பதை தெரிவித்தார்.

    இதில் டு பிளிசிஸ் டாஸ் வென்றார். பொதுவாக ஐசிசி போட்டி நடுவர் பார்வையில் டாஸ் சுண்டப்படும். கேப்டன் வரமுடியாத நிலை ஏற்பட்டால் துணைக் கேப்டன் டாஸ் சுண்டலாம்.

    ஆனால் டு பிளிசிஸ் டுமியை வைத்து டாஸ் சுண்ட வைத்தார். இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நான் என்ன செய்தனோ, அதை விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் சில சுவராஸ்யமான வேடிக்கைகள் நிகழ வேண்டும். அது இங்கே இருந்து தொடங்கியுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×