search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது டெஸ்ட் போட்டி- ரி‌ஷப்பந்த் மீண்டும் சதத்தை தவறவிட்டார்
    X

    2வது டெஸ்ட் போட்டி- ரி‌ஷப்பந்த் மீண்டும் சதத்தை தவறவிட்டார்

    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 92 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் சதத்தை தவறவிட்டார். #INDvWI #RishabhPant
    ஐதராபாத்:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 6 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து இருந்தது. பிரித்விஷா 70 ரன் எடுத்தார். ரகானே 75 ரன்னும், ரிசப்பந்த் 85 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரகானேயும், ரி‌ஷப்பந்தும் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

    ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் ரகானே ஆட்டம் இழந்தார். அவர் 183 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 314 ஆக இருந்தது.

    அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஹோல்டரின் 30 ஓவரில் ரகானேயும் (முதல் பந்து), ஜடேஜா (3-வது பந்து) பெவிலியன் திரும்பினார்கள்.


    மறுமுனையில் இருந்த இளம் வீரரான ரிசப் பந்த் தனது 2-வது சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 92 ரன் எடுத்து இருந்தபோது கேப்ரியல் பந்தில் ‘அவுட்’ ஆனார். அவர் 134 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

    ரிசப்பந்த் 2-வது முறையாக செஞ்சூரியை தவறவிட்டார். ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் அவர் 92 ரன்னில் வெளியேறி இருந்தார்.

    அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 322 ஆக இருந்தது. 8 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்தது.

    8-வது விக்கெட்டுக்கு அஸ்வின்- குல்தீப் யாதவ் ஜோடி ஆடியது. #INDvWI  #RishabhPant
    Next Story
    ×