search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உமேஷ் யாதவ் அதிர்ஷ்டம் இல்லாதவர்- பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் சொல்கிறார்
    X

    உமேஷ் யாதவ் அதிர்ஷ்டம் இல்லாதவர்- பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் சொல்கிறார்

    உமேஷ் யாதவிற்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #TeamIndia
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். அதிவேக பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியவர். ஆனால் இந்தியா தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து சென்று விளையாடும்போது அவருக்கு போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    8 டெஸ்ட் போட்டியில் ஒன்றில் மட்டுமே விளையாடினார். 2018-ல் இந்தியா விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே களம் இறங்கியுள்ளார். சிறப்பாக பந்து வீசும் உமேஷ் யாதவிற்கு அதிர்ஷ்டம் இல்லை என பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.



    உமேஷ் யாதவ் குறித்து பரத் அருண் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் ஏராளமான போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. இதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதுதான்.

    எங்களுடைய திட்டம் பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். இதில் உமேஷ் யாதவ் ஒரு பகுதி. உமேஷ் யாதவால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×