search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவி சாஸ்திரி, விராட் கோலியை எதிர்க்க தேர்வுக்குழுவிற்கு அனுபவம் போதாது- சையத் கிர்மானி
    X

    ரவி சாஸ்திரி, விராட் கோலியை எதிர்க்க தேர்வுக்குழுவிற்கு அனுபவம் போதாது- சையத் கிர்மானி

    தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி முடிவுகளை எதிர்த்து சவால் கொடுக்க தேர்வுக்குழுவிற்கு போதுமான அனுபவம் இல்லை என கிர்மானி தெரிவித்துள்ளார். #BCCI
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என இழந்தது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டியில் விளையாடிய முரளி விஜய் 4-வது மற்றும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். கருண் நாயர் ஐந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. அணியில் சேர்க்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறவில்லை என்று தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    ஆனால் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இருவரின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரின் முடிவை எதிர்க்க தேர்வுக்குழுவிற்கு போதிய அனுபவம் இல்லை என்று முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பரும், தேர்வுக்குழு தலைவரும் ஆன சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சையத் கிர்மானி கூறுகையில் ‘‘நீங்கள் என்னிடம் கேட்டால், தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, முக்கிய தேர்வாளராக இருக்கிறார் என்பேன். ரவி சாஸ்திரி, விராட் கோலி மற்றும் சீனியர் உறுப்பினர்கள், எதை விரும்புகிறார்களோ, அதை தேர்வுக்குழுவில் வலியுறுத்துகிறார்கள்.

    மரியாதை கொடுக்கக்கூடிய தேர்வுக்குழு ரவி சாஸ்திரி, கோலியை விட அனுபவமற்றவர்களாக இருக்கிறார்கள். ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் அவர்களை விட அதிக அனுபவம் பெற்றவர்களாக இருப்பதால், நிர்வாகம் என்ன விரும்புகிறதோ, அதை செய்கிறார்கள். ஏனென்றல் அவர்களால் எதிர்த்து விவாதம் செய்ய முடியாது’’ என்றார்.
    Next Story
    ×