search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப்டன் பதவியில் அதிக ‘டை’ முடிவுகள்- எம்எஸ் டோனியே முதலிடம்
    X

    கேப்டன் பதவியில் அதிக ‘டை’ முடிவுகள்- எம்எஸ் டோனியே முதலிடம்

    கேப்டன் பதவியில் அதிக ‘டை’ முடிவுகளை சந்தித்தவர்களில் மகேந்திர சிங் டோனியே முதல் இடம் பிடித்துள்ளார். #MSDhoni #AsiaCup2018
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரே இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள டோனி, இந்தியாவிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய 2-வது வீரரும், கேப்டனாக 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரரும் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டி எம்எஸ் டோனி கேப்டனாக களம் இறங்கிய 200-வது போட்டியாகும். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதன்மூலம் டோனி தலைமையில் இந்தியா 5-வது முறையாக ‘டை’ முடிவை சந்தித்துள்ளது.



    இதன்மூலம் கேப்டனாக அதிக ‘டை’ போட்டிகளை சந்தித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். ஆர் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் வாக், பொல்லாக் ஆகியோர் தலைமையில் அந்தந்த அணிகள் தலா மூன்று முறை ‘டை’ முடிவை சந்தித்துள்ளது.

    இந்த போட்டிக்கு முன்னர் எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.
    Next Story
    ×