search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் கிரிக்கெட்- இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-0 எனக் கைப்பற்றியது
    X

    பெண்கள் கிரிக்கெட்- இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-0 எனக் கைப்பற்றியது

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீராங்கனகைள் கடைசி போட்டியில் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை 4-0 எனக் கைப்பற்றியது #INDWvSLW
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினார்கள்.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது மற்றும் 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் மிதாலி ராஜ் (12), மந்தனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

    அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 18.3 ஓவரில் 156 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் ஸ்ரீவர்தனே, பெர்னாண்டோ தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 105 ரன்னில் இலங்கை சுருண்டது. இதனால் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.
    Next Story
    ×