search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் நிகழ்த்தினார்- கேப்டன் புகழாரம்
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் நிகழ்த்தினார்- கேப்டன் புகழாரம்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை அபாரமாக வீசய முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காள தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 249 ரன்கள் குவித்தது. பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் ஓவர் செல்ல செல்ல இலக்கை நோக்கி பயணம் செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான வீசினார். போட்டியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    முஷ்டாபிஜூர் ரஹ்மானின் அபார பந்து வீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காள தேசம், பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.



    கடைசி ஓவரை அபாரமாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மானை கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சு குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘போட்டியின் முடிவில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் காட்டியவர் போன்று காட்சியளித்தார். கடைசி ஓவரில் 8 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் கடினமானது. அனைத்து புகழும் முஷ்டாபிஜூர் ரஹ்மானையே சாரும்.

    போட்டியின் மத்தியில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தசைப்பிடிப்பால் சற்று அவதிப்பட்டார். அவர் 10 ஓவர் முழுவதும் வீச வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அவரால் 10 ஓவரை நிறைவு செய்ய முடியவில்லை. அவர் பந்து வீசியது மிகவும் கடினமானது’’ என்றார்.
    Next Story
    ×