search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு நாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா
    X

    ஒரு நாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா

    தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனை படைத்துள்ளார். #RohitSharma #AsiaCup2018 #INDvPAK
    துபாய் :

    14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

    அடுத்து 238 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்கள். இதனால் 63 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 94 ரன்கள் அடித்த போது ஒரு நாள் போட்டியில் 7 ரன்களை கடந்தார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார்.
     
    கேப்டன் விராட் கோலி 161 போட்டிகளிலும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 174 போட்டிகளிலும் 7 ரன்களை குவித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 19-வது சதத்தை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. #RohitSharma #AsiaCup2018 #INDvPAK 
    Next Story
    ×