search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிசர்ட் விளம்பரங்கள் மூலம் 625 மில்லியன் பவுண்டுகள் வருமானம் ஈட்டும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப்புகள்
    X

    டிசர்ட் விளம்பரங்கள் மூலம் 625 மில்லியன் பவுண்டுகள் வருமானம் ஈட்டும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப்புகள்

    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் டிசர்ட் விளம்பரங்கள் மூலம் இந்த சீசனில் 625 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன. #EPL
    ஐரோப்பா நாடுகளில் கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ, பண்டேஸ்லிகா போன்ற தொடர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.



    இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.



    இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.



    2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

    அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.

    மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
    Next Story
    ×