search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் நாளை மீண்டும் மோதல்
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் நாளை மீண்டும் மோதல்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகிறது. #AsiaCup2018 #PAKvIND #INDvPAK

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. கடந்த 20-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.

    இதன் முடிவில் ‘ஏ’பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுத பெற்றன. இலங்கை, ஆங்காங் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

     


    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 49.1 ஓவர்களில் 173 ரன்னில் சுருண்டது. ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 3 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 82 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்னும் (அவுட் இல்லை), தவான் 40 ரன்னும் டோனி 33 ரன்னும் எடுத்தனர்.

    2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.

    இன்று ஓய்வு நாளாகும். ‘சூப்பர் 4’ களின் 3-வது ஆட்டம் துபாயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே நடந்த ‘லீக்‘ ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால் நாளை மீண்டும் தோற்கடிக்க இயலும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (158), தவான் (213 ரன்), அம்பதிராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார் (6 விக்கெட்), பும்ரா (5 விக்கெட்), ஜடேஜா (4 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டியில் இந்தியா 53-ல், பாகிஸ்தான் 73-ல் வெற்றி பெற்றன. 4 ஆட்டம் முடிவு இல்லை. #AsiaCup2018 #PAKvIND #INDvPAK

    Next Story
    ×