search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    65 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து வங்காள தேசம் திணறல்- 25 ஓவரில் 78-5
    X

    65 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து வங்காள தேசம் திணறல்- 25 ஓவரில் 78-5

    வங்காள தேசம் 65 ரன்கள் அடிப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

    லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நஸ்முல் ஹுசைன் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    தொடக்க விக்கெட்டுக்களை 16 ரன்னுக்குள் இருவரும் வீழ்த்தினார்கள். அதன்பின் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கும்போது ஜடேஜா பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கைக்கு எதிராக சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை 21 ரன்னிலும், முமகது மிதுனை 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஜடேஜா வெளியேற்ற வங்காள தேசம் 65 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மொசாடெக் ஹுசைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. வங்காள தேசம் 25 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    Next Story
    ×