search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா ஓபன் பேட்மிண்டன்- பிவி சிந்து காலிறுதியில் தோல்வி
    X

    சீனா ஓபன் பேட்மிண்டன்- பிவி சிந்து காலிறுதியில் தோல்வி

    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து காலிறுதியில் தோல்வியடைந்தார். #PVSindhu
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் சென் யுஃபெய்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் சீன வீராங்கனை சென் யுஃபெய் சிறப்பாக விளையாட 11-5 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிசி சிந்துவால் முன்னேற இயலவில்லை. 7-14, 7-16, 10-16 என வந்து பின்னர் 11-21 என முதல் செட்டை இழந்தார்.

    முதல் செட்டை இழந்த பிவி சிந்து 2-வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் இடைவெளி 7-6 எனக் குறைந்தது. முதல் பாதியில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றார். அதன்பின் 17-11 என முன்னிலைப் பெற்று 21-11 என 2-வது செட்டை கைப்பற்றினார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து 4-3 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் சென் 9-7 என முன்னிலைப் பெற்றார். முதல் பாதியில் 8-11 என பிவி சிந்து பின்தங்கினார். 16-12 என முன்னிலைப் பெற்று பின்னர் 21-15 என 3-வது செட்டை கைப்பற்றி பிவி சிந்துவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் சீன வீராங்கனை சென் யுஃபெய்.
    Next Story
    ×