search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு- வங்காளதேசத்துடன் இன்று பலப்பரீட்சை
    X

    இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு- வங்காளதேசத்துடன் இன்று பலப்பரீட்சை

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா அணி வங்காளதேசத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. #Asiacup2018 #INDvBAN
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    இதன் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    சூப்பர் 4 சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்திய அணி வங்காளதேசத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    இந்தியா லீக் ஆட்டத்தில் ஹாங்காங், பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா, குல்தீப்யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

    வங்காளதேசம் அணி நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் மண்ணை கவ்வியது. மேலும் ஓய்வு இல்லாமல் இன்றே இந்தியாவுடன் மோதுகிறது. இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும் வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரகிம், ஷிகிப்-அல்- ஹசன், மகமத் துல்லா, முகமது மிசன், மோர்தசா, முஸ்தாபிஜுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இப்போட்டி மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.

    அபுதாபியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

    லீக் ஆட்டத்தில் ஆங்காங்கை பாகிஸ்தான் எளிதாக வென்றது. ஆனால் இந்தியாவிடம் 162 ரன்னில் சுருண்டு தோற்றது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங்கில் எழுச்சி பெற முயற்சிப்பார்கள்.

    ஆப்கானிஸ்தான் லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசத்தை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் முதுகெலும்பாக கழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் உள்ளார்.

    நேற்று வங்காளதேசத்தை தோற்கடித்த உத்வேகத்துடன் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளிக்குமா? என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #Asiacup2018 #INDvBAN
    Next Story
    ×