search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு - டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பேட்டி
    X

    அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு - டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பேட்டி

    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா கூறியுள்ளார். #ManikaBatra #Olympic
    புதுடெல்லி:

    இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.



    டெல்லியை சேர்ந்த 23 வயதான மனிகா பத்ரா அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மனிகா பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது மனஉறுதியை பலப்படுத்தி இருக்கிறது.

    அடுத்து நான் ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக உழைக்க இருக்கிறேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். உலக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வருவதும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதும் தான் எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.  #ManikaBatra #Olympic 
    Next Story
    ×