search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடற்தகுதி முன்னேற்றம் என்னை மாறுபட்ட கிரிக்கெட்டராக மாற்றியது- கேதர் ஜாதவ்
    X

    உடற்தகுதி முன்னேற்றம் என்னை மாறுபட்ட கிரிக்கெட்டராக மாற்றியது- கேதர் ஜாதவ்

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய கேதர் ஜாதவ், வெற்றி ரகசியத்தை வெளியிட்டுள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.

    புவனேஸ்வர் குமார் தொடக்க விக்கெட்டை விரைவில் வீழ்த்திய பிறகு, பார்ட்-டைம் பந்து வீச்சாளரான கேதர் ஜாதவ் சிறப்பாக பந்து வீசி 9 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மிடில் ஆர்டரில் கேதர் ஜாதவ் விக்கெட் வீழ்த்தியதால் பாகிஸ்தான் ரன் குவிக்க இயலாமல் போனது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஹாம்ஸ்ட்ரிங் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட கேதர் ஜாதவ், சுமார் நான்கு மாத தீவிர பயிற்சிக்குப் பிறகு சர்வ தேச போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

    முதல் போட்டியிலேயே அசத்திய கேதர் ஜாதவ், உடற்தகுதி முன்னேற்றமே என்னை மாறுபட்ட வீரராக மாற்றியது என தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கேதர் ஜாதவ் கூறுகையில் ‘‘வலைப் பயிற்சியின்போது நான் அதிக ஓவர்கள் வீசவில்லை. பொதுவாக உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒன்றிரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினேன். நான் ஒருவேளை அதிகமாக பயிற்சி எடுத்து கொண்டு போட்டியில் களம் இறங்கியிருந்தால், ஒருவேளை எடுபடாமல் கூட போயிருக்கலாம். அதனால் நான் என் லிமிட்டோடு நின்று கொள்கிறேன்.

    காயத்திற்குப் பிறகு என்னுடைய உடற்தகுதி நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக டிரைனிங் மற்றும் ஃபிட்னஸ் குறித்து ஏராளமாக கற்றுக் கொண்டேன். இது எனக்கு உண்மையிலேயே உதவிகரமாக இருந்தது. என்னை மாறுபட்ட கிரிக்கெட்டராகவும் மாற்றியது’’ என்றார்.

    Next Story
    ×