search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி
    X

    எங்கள் வியூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்விக்கு பின் சர்பிராஸ் அகமது பேட்டி

    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கள வீயூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்துவிட்டதாக தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார். #SarfrazAhmed #KedarJadhav
    துபாய் :

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    இதனால் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ரன்களை குவித்து எளிதில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில், ‘ நாங்கள், குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவரது சுழற்பந்து வீச்சை எதிர்க்கொள்வதற்கு ஏற்ப கள வியூகம் அமைத்தோம். ஆனால், எதிர்பாராமல் மூன்றாவதாக வந்த கேதார் ஜாதவ் எங்களின் வியூகங்களை தகர்த்தெறிந்து விக்கெட்டுக்களை சாய்து விட்டார். கேதர் ஜாதவின் பந்துவீச்சை கணித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது.

    முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த பின்னர் பாபர் அசாம், சோயிப் மாலிக் இணையின் நிதான ஆட்டத்தினால் சரிவில் இருந்து அணி மீண்டது. ஆனால், அதன் பிறகு மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் நாங்கள் எதிர்பார்த்த ரன்களை அடிக்க முடியவில்லை.



    எங்கள் அணி வீரர்கள் அனைவரும் மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தோம். எனினும் குரூப் போட்டிகள் என்பதால் இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் இந்த தவறுகளை சரி செய்வோம் என அவர் கூறினார். #SarfrazAhmed #KedarJadhav
    Next Story
    ×