search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 25-2
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 25-2

    இந்தியாவிற்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் அடித்துள்ளது. #INDvPAK #PAKvIND #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரில் பாகிஸ்தான் இரண்டு ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை பும்ரா வீசினார். பகர் சமான் இந்த ஓவரை சந்தித்தார். இந்த ஓவரில் பகர் சமான் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் மெய்டன் ஓவராக அமைந்தது.

    3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை முன்னால் வந்து அடிக்க முயன்றார் இமாம்-உல்-ஹக். பந்து பேட்டின் முனையில் உரசி டோனியிடம் தஞ்சம் புகுந்தது. இதனால் பாகிஸ்தான் இரண்டு ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் களம் இறங்கினார். இந்த அடுத்த ஐந்து பந்துகளையும் தடுத்து ஆடினார். இதனால் புவனேஸ்வர் குமார் மெய்டனுடன் விக்கெட் வீழ்த்தினார்.

    5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகர் சமான் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 3 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.



    3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஒவரில் பாபர் ஆசம் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 9-வது மற்றும் 20-வது ஓவரில் பாகிஸ்தான் பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை.

    பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. மாலிக் 10 ரன்னுடனும், பாபர் ஆசம் 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×