search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 3-2 என வீழ்த்தியது லிவர்பூல்
    X

    யூரோ சாம்பியன்ஸ் லீக்- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 3-2 என வீழ்த்தியது லிவர்பூல்

    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 3-2 என வீழ்த்தியது லிவர்பூல். #ChampionsLeague #PSG #LiverPool
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது.

    இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.



    ஒரு ஆட்டத்தில் குரூப் ‘சி’யில் இடம்பிடித்துள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - லிவர்பூல் அணிகள் மோதின. இரண்டு முன்னணி அணிகள் மோதியதால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக அமைந்தது.

    ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஜேம்ஸ் மில்னர் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    லிவர்பூல் அணிக்கு பதிலடியாக பிஎஸ்ஜி அணியின் தாமஸ் மெயுனியர் 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் கிலியான் மப்பே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலை ஆனது.

    90 நிமிடம் வரை இதே ஸ்கோர் நிலவியதால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் ரொபெர்ட்டோ ஃபேர்மினோ கோல் அடிக்க லிவர்பூல் த்ரில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×